கைகோர் தமிழா கைகோர்........! இந்த பூமியில் வாழ கைகோர்...! தூய தமிழனாய் வாழ கைகோர்..!
உழுதுண்டு வாழ்ந்தவர் நாங்கள்.! அதை உலகுக்கு தந்தவர் நாங்கள்.! நிலம் இன்றி அகதியாய் சிறுபான்மை......சின்னமாய் நாங்கள்!
மூத்தவர் ஆண்டு சென்றுவிட... வந்தவர் நாம் மெனியாய் .. அடிமையாய் தொடர்கின்றோம் ......... எட்டு கோடியாய் உள்ளோம் ....! எட்டி உதைத்திட ஒன்று சோர்வோம்...... பூமியில் திசையெங்கும் வாழ்கின்றோம்.... சொந்தமாய் நிலம் ஒன்று சேர்ப்போம்....
தொழுது நாம் வாழ்ந்த கோவில் அங்கு குண்டுகள் வீழ்கின்றது இன்று சிறு துண்டு தசைகளாய் வீழ்ந்து - சாகிறான் தமிழன் தினமும் ........ நிலாச் சோறு உண்ட முற்றம் அங்கு வீசுகின்றது இரத்தத்தின் நாற்றம்... மெல்ல வருடிய தென்றலில் நாளும் அவலமாய் செத்தவன் கூக்குரல்....!
இன்பமாய் விடிந்த காலை கொலையும் களவுமாய்விடிகின்ற நாட்கள்....! செம்மொழி பேசினால் தமிழன் சிறையில் எண்ணிடும் நாட்கள்....!
வடக்கிலும் கிழக்கிலும் வாழ் நாள் முண்டமாய் பைக்குள்............ வீதியில் பிஞ்சு குழந்தைகள் முன்னே இரத்த வெள்ளத்தில் தந்தை................! பெற்ற தாய்க்கு முன்னே துப்பாக்கி குண்டேந்தி தனையன் ................! தெவமாய் போற்றும் பெண்கள் தம் வாழ்க்கையை தொலைத்த பின் தனியே................! கூடவே சுற்றிய நண்பன் கோணிப்பைக்குள் பிணமாய் .....! புத்தக பையுடன் சென்ற சிறிதொன்று கிணற்றுக்குள் பிணமாய்................! மணமுடித்து ஆறாம் நாள் காணமல் போன கணவன் .........................!
தமிழுக்கு வாலாட்டிய நாய்க்கு துப்பாக்கி ரவையே பரிசாம் ................! இன்னும் வெறுமையாய் ஏன் ஒதுங்கி ஓடுகிறாய்...... இழப்பையே இருப்பாக்கி மெனியாய் தொடர்கிறாய்...???? மரம் வெட்ட தடையுண்டு தமிழனை வெட்டபரிசு உண்டாம்.....
வன்னியின் வான் பரப்பில் வல்லூறு எச்சங்கள் ................! அதிகாலையில் ஆனந்த பறவையின் குரல் கேட்டு கண்விழித்தோம் ... ஆனால் இன்று இடியாய் அதிரும் பல்குழல் ஒலி கேட்டு தேடுகிறோம் பதுங்குகுழியை................!
கண்சிமிட்டும் நட்சத்திரத்தை கண்சிமிட்டாமல் பார்த்திருந்தோம்.... ஆனால் இன்று கண்சிமிட்டும் நேரத்தில் வான் இயந்திரத்தின்வக்கிர தேசமாய் மாறும் ................! காலாற நாம் நடந்த வயல் காடு கண்னிவெடி விளையும் வயலாய் இன்று ................! நெல்லரிசி சோறுமாய் ஒடியல் பிட்டுமாய் உரம் ஏற்றிய உடம்பு புழுப்பிடத்த அரிசிக்காய் நீண்ட வரிசையில் நடு வெய்யிலில் ................!
குருவிக்கு கூட கூடு உண்டு தமிழா ................! உன் பிஞ்சுக்கு நாடு உண்டா.....???????????? பாதச்சுவட்டை பதித்திடு ஒரு திசையிட்டு கைகளா நீட்டி கைகோர்த்து வந்திடு புள்ளியாய் உள்ள மண்ணை புணிதமாய் காத்து புதுயுகம் படைக்க புலியாக புறப்படு தமிழா... .....................
எங்கள் உயிர் உயிர் இல்லையா? ...........................
பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும். இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின் இறப்பெனில் சந்தோசம். அதை செய்த சிப்பாய்க்கு பதவி உயர்வுகள் தானாக கிட்டும். பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே இறந்து கிடப்பது தான் விதியா???? இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள் எழுதிடத்தான் ஐ.நாவே நீயா?? சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும் சர்வ தேசத்தின் பணியா??
காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு இவரை துளைத்துள்ளது. அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது. இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா?? இல்லை புத்தரின் போதனையும் இதுதானா?? வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா?? சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும் தெரிந்து கொண்டு இறப்போம் ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று
அவலச்சா வேண்டாம் எமக்கு அதுதான் விதி என்றால் நாட்டைதா எம் உயிரை ஈடுவைத்து அறியாத பிஞ்சுதான் உனக்கு குறியென்றால் நீதான் உனக்கு உலகத்தில் பெரும் வீரன் நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும் காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் எம் மண் வீழா.
இப் பிஞ்சில் இருந்து கொட்டிய ஒவ்வொரு குருதிச் சொட்டும் மொட்டாகி மலராகி நாளை உன்னைத் தாக்கும் கணையாகும் புலத்திலும் எம் நிலத்திலும் இது நிச்சயம் நடக்கும். காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்.. அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள். ................................
ღ♥அன்புள்ள காதலிக்கு ♥ღ♥ ....................
பூவுலகில் ஒரு மொட்டாக நான் விழ்ந்து விடலையாய் ஆன பின் என் கண் விழித்திரை விம்பத்தில் உணர்ந்தேன் உன்னை
உன்னை பார்த்தாலே எனக்கு பேச்சும் வரவில்லை மூச்சுக்கு என்னவாச்சோ தெரியவில்லை நண்பனை கண்டவுடன் இதயத்தின் ஓர விளிம்பில் ஒரு வித நடுக்கம் ஆனால் உன்னை கண்டாலே மூளைக்குள் ஆயிரம் பூக்கள் பூக்கின்றன
நீ பார்வைகள் உதிர்த்து விட்டு செல்கையில் அது உடலை உருக்கி உயிரை அல்லவா கொல்கின்றது
முத்து பற்களும் முறுகிய சுருள் மயிரும் பிராகச மின்னலை உதிரும் விழிகளும் தேன்வடியும் பேச்சும் மெழுகு பொம்மையாய் உடலும்..!! உன அழகை என்னவென்று சொல்வேன் அழகு என்ற வார்த்தைக்கு அகராதியில் பொருள் தேடியும் பயனில்லை நடமாடும் அகராதி நூல் நீமட்டும் தான் பெண்ணே
உள்ளத்தில் ஒரு வகை காச்சல் அதனுடன் என்னால் போராடமுடியவில்லை எதிர் நீச்சல் உன்னை தேடியே விழியின் மேச்சல் அதை சொல்லத்தயங்குகின்றேன் என் பேச்சில் உனக்கதை புரியவைக்கத்தான் இந்த அலைச்சல்
வயது வந்து மேடையிட்டு ஆடுதா கூத்து இல்லை மாயை என்னை வீழ்த்த வரும் வலையா உன் பேச்சில் மயங்கும் மனதை கட்டிவைக்க முயல்கிறேன் உன்னை கண்டவுடன் கண்மூடி திரும்பினால் மனத்திரையில் புன்னகைத்து ஏளனம் செய்கிறாய் பட்டு உடுத்தி கொஞ்சும் தமிழ் பேசி உருகிறாய் பிஞ்சு மனம் எனதை ஏன் மருகிறாய்
பூமியில் நான் மனிதனய் பிறந்தது தவறா....? அல்லது அந்த ஆண்டவன் தவறா..? முடிவின்றி தொடர்கின்றது என் ஆராட்சி ஆனாலும் தவறுகள் வர்க்கத்தில் விரிகின்றது.
அதிகார முள்ளில் கரைந்தோடும் நாட்கள் கண்டு என் இதயம் கொதிக்கின்றது அதனால் விழியாலே பேசும் வித்தக பதுமையே உன்னை பொறுமைக்குள் திணிக்கும் காலம் இது
பரந்து விரியும் உன் ஆசையை தூக்கில் இடு அடங்க மறுக்கும் உன் உணர்வுகளை சிறையில் இடு என்னை தேடும் உன் விழிகளுக்கு சில காலம் ஓய்வு கொடு பிறவி கடமைக்கு நான் புறப்படும் காலம் இது எல்லையில் எதிரியின் எச்சங்கள் எக்காளம் இட்டு எம் நிலத்தை ஏப்பம் இட திட்டங்கள் தீட்டி அணிவகுத்து வருகின்றதாம் அவர்களை கண்டதுண்டமாய் கருவாடு ஆக்கி தாய் நிலத்தை காத்து உன்னை கரம் பிடிக்க வருவேன்.
::::::::::::::::::::::::::::
அவலத்தில் இருந்து ஒரு குரல் ...........................
ஈழத்தமிழராக பிறந்த நாங்கள்அழிவை மட்டும் கண்டு நிற்கும் ஏதிலிகள். நின்மதியாய் வாழ ஏங்கும் அகதி அற்ற வாழ்வுக்கு ஏங்கும் மானிடத்தின் பகுதி நாங்கள்.பிறந்தவர்க்கு இறப்பு நிஜம் எங்களின் முற்றத்தில் நித்தமும் நிஜம்.
இரத்தவாடை எங்கள் வீட்டில் இன்றும் கந்தகப்புகைஎங்கள் மண்ணில். துன்பம் மட்டும் மீதிவாழ்வில் சற்றும் இன்பம் இல்லை சமாதானம் வந்ததுண்டு ஆனால் எந்த பயணும் தந்ததில்லை. பேச்சுக்கள் பல நடந்ததுண்டு உடன்பாடு கண்டதில்லை. பேச வந்த நாடு எல்லாம் புலிகளாகி போன பின்பு தனியனாக நாங்கள் இங்கு. சுற்றி நின்ற சொந்தமில்லை இறந்து கொஞ்சம் அழிந்து போச்சு பறந்து கொஞ்சம் தூரப்போச்சு.
வேர்வை விட்டு கட்டி வைத்து அழகுபார்த்த வீட்டில் எங்கள் கால்கள் பட்டு பல நாட்கள் ஆச்சு. கல்லு மட்டும் உண்டோ அங்கு புல்லுதான் முழைத்து மறைத்துள்ளதோ. குண்டை வைத்து இடித்தார்களா? -இல்லை இடித்து அள்ளிச் சென்றார்களா தொவியவில்லை. கிழுவை வெட்டி நட்டுவைத்தோம்.... எல்லை இட்டு அடைந்து வைத்தோம்.... எல்லை கடந்து வந்தவனால் எல்லையில்லா துன்பப்பட்டு எட்ட ஓடிப்போய் இப்போ அகதியாக வாழுகின்றோம்.... ஊனும் உயிரும் மட்டும் மிச்சம் சேர்த்து வைத்த சொத்தால் அச்சம் உயிரை கூட காக்க வேண்டும் என்றால் போராட வேண்டும் என்னும் நிலைதான் மிச்சம்....
காணிக்காக எல்லை இட்டோம் நாட்டுக்கு போடாது விட்டோம்... எல்லை இட்டகாணி இல்லை விளைந்து நின்ற நிலமும் இல்லை கட்டி வைத்த கோவில் இல்லை கும்பிட்ட காளி இல்லை.... நாட்டுக்கு எல்லை ஒ
ஈழ மண் எங்களின் சொந்த மண் அதை தன் சொந்தமென்று யார் சொன்னவன்
நம் மண்ணின் உள்ளே வந்து பார் வந்தாலும் நிற்க முடியுமா உன்னால்
எம் முன்னே காசுக்காய் காட்டியே கொடுத்தாலும் கடத்தித்தான் நடு காட்டில் விட்டாலும் எங்கள் வாழ் நாட்கள் சில நாளே ஆனாலும் எம் மண்ணின் விடுதலை காண்போம்
கோடியாய் கொட்டி நீ கொடுத்தாலும் குண்டை மழையாக பொழிந்தாலும் நம்மை பெற்ற அன்னை மண்னை நாம் மறந்து போகமாட்டோம்
அமைதியாய் பதுங்குது புலி அது பாய்ந்திடும் போது தெரியும் உனக்கு அதன் வீரம்
ஈழத்துச்சூரியனே
வேங்கையாக வந்தவரே! அக்கினி குஞ்சாய் வந்து தூங்கிய தமிழரை எழுப்பிய அயனே.
குருதி சொட்ட கூனிக் குறுகி ஓடிய தமிழனை பாயும் புலியாக்க நீர்வந்து நின்றீர் அச்சத்தில் அடங்கி அழுது கிடந்த தமிழன் வீரத்தினை தட்டி எழுப்பி தமிழனாய் வாழ சொல்லிகொடுத்தீர். நெஞ்சில் உரமிட்டு வீரராய் வளர்த்தீர். வாழ்வதும் வீழ்வதும் இனி விதி எனச் சொல்லி விதியே கதியென வீழ்ந்து கிடந்தவனை ஆயுதம் கொடுத்து களத்தினில் விட்டீர். புலியாக புறப்பட்ட தமிழனை உலகறிய வைத்ததீர்.
கார்திகைப்பூவேடு கூடவே பிறந்தீர் காட்டிலும் மேட்டிலும் தமிழருக்காய் நடந்தீர். தெற்கிற்கும் ஆமிக்கும் அஞ்சிய எங்களை களமாட விட்டு கண்ட ரசித்தீர்.
அறைக்குள் அடங்கிய தமிழிச்சி வீரத்தை கரும்புலியாக்கியே உலகறிய வைத்தீர். அகப்பையோடு அலைந்த அவளை ஆட்லறியோடிங்கு விளையாடச்செய்தீர் அடுப்பு விறகில் தீயிட்ட பெண்னை எதிரி குகையிலும் தீமூட்ட செய்தீர். அன்ன நடை நடந்த எம் பெண்கள் நீரிலும் வானிலும் தரையிலும் மிடுக்குடன் நடப்பது உம்மால்
தர்மயுத்தமாய் இராமாயணம் பாரதம் எல்லாம்வெறும் புராணமாய் நாம்அறிந்தோம் ஈழத்தின் தர்ம யுத்தத்தை நடாத்திட தலைவனாய் நீங்கள் வந்த பின்னர்தான் அவை நியம் என நாம் உயர்ந்தோம்.
காகிதக்கப்பலை மழை வெள்ளத்தில் விட்டுத்தான் இதுவரை நாம் இரசித்தோம் இனிவரும் நாட்களில் தமிழ் ஈழத்தின் கப்பலை ஓட்டிடும் கனவுடன் பலர் உங்களின் படை தொடர்வோம். காற்றினில் பட்டத்தை ஏற்றித்தான் இதுவரை நாம் வான் தொட்டோம் தமிழீழ வான்படை கண்டதன் பின்னர் தான் எம் பலம் நாம் உணர்ந்தோம்.
வால்பிடித்து கால்பிடித்து இனம் விற்ற எழியவர்கள் தலைகுனிந்தார் அமைதியாய் உறங்கிய வீரத்தமிழர்கள் உம் செயல் கண்டு உமைத் தொடர்ந்தான் இறுதிவரை உமைத் தொடர்வார். மலையென எதிரி எம் குகை புகுந்தாலும் இறப்பொன்று நாளை நம் இருபிடம் வந்தாலும் உம்முன்னே நாம் நடப்போம் வீர இனத்தின் பிறப்பென்னும் புகழுடன் உங்களின் வழி தொடர்ந்திருப்போம்.
இனியெமக்கும் அச்சமில்லை எந்த எதிரி வந்தபோதும் அச்சம் என்பது இல்லை அண்ணனாக நீங்கள் இங்கு உள்ளவரைக்கும் இச்சகத்தில் அச்சம் என்பது இனி எமக்கு எப்பவுமே இல்லை நெருப்பாற்றை நீந்தி கடக்க செல்லித் தந்தவர் நீர் இனி நாம் எரிமலைக்குள்ளும் இறங்கி முத்தொடுப்போம் தர்மத்தை வெல்ல வைக்கும் வரை உம் வழி தொடர்வோம்.
தமிழா
தமிழன் என்ற அடை மொழியை அகற்ற நாம் என்ன இறைவனிடம் வரமா கேட்க முடியும்
அதர்மத்தை அகற்ற அஸ்திரம்தான் வழியென நாம் கீதையில் கற்றதுண்டு
நாம் வாழும் நரகத்தில் நமது இடம் அகதியின் உறைவிடம் அதை அஸ்தமனம் ஆக்க ஆண்டவா எம்மை ஆளவிடு என கடவுளை வேண்டினால் காரியம் ஆகாது
கடலாலே வந்த அந்த கயவர் கூட்டம் எம் நிலத்தை களவாடி இட்ட அந்த சிங்க கொடியை தறித்திட வேண்டும்
மீண்டும் தமிழ் தழைத்திட வேண்டும் தமிழர் தலை நிமிர்ந்திட வேண்டும்
விதியே கதியே என எண்ணி உன் கதியை அவர் கையில் இட்டால் சதியால் உன் நிலத்தை சூறயாடிடுவார் சந்ததி வாழ ஒரு துண்டு நிலத்தையும் தரமாட்டார்
சங்கத்தால் வழர்த்த மொழி பேச சங்கடம் வரும் என்று மறக்கிறாய் சொந்த முகவரி மறைக்க முகவரி தேடி அலைகிறாய்
போதும் தமிழா போதும் நீ பட்ட துன்பம் வாழ்கையில் வட்டம் உண்டேல் அதில் தோல்விக்கே இடம் ஒன்று உண்டு
நம்பிக்கையுடன் தலை தலைதூக்கு இறுமார்ப்புடன் நெஞ்சை நிமிர்த்து வெற்றிகள் உனை வந்து சேரும் தோல்விகள் தனியென மறையும் நீயும் இப் பூமியில் வாழவே தோற்றவனாய் சாவதற்கு அல்ல .......................................
தமிழா
எதிரி என்பவன் உன்னை குழி தோண்டி புதைத்தாலும் கலங்காதே தமிழா தோண்டி புதைத்த அடிக்கல்தான் ஆயிரம் மாடிக்கு படிக்கல்
உதிர்ந்துதான் போனாய் என்று ஏங்கி நீ விடாதே கண்ணீர் பள்ளத்தில் வீழ்கின்ற நீர்தான் பாய்ந்தோடும் ஆறாய் சேரும்
வானத்து நீர் வீழ்ந்துதான் பெரு வெள்ளமாய் உலகையே மிரட்டும் நிலத்தில் வீழ்கின்ற விதையே பெரு விருட்சமாய் நிழல் தந்து நிற்கும்
தோல்வியை கண்டதும் வீட்டுக்குள் ஒழிந்து சோகத்தில் உறங்கிட வேண்டாம். உறக்கத்தில் நீ இருந்தாலும் பறக்க விட்டு விடு உன் புத்தியை
புதுமையை தேடு வாழ்வில் அதை கண்டதும் ஏங்கணும் பகைவர் பயத்தினால் நடுங்கணும் அவர்கள்
தமிழா இரவும் பகலும் உண்டேல் அங்கு தோல்வியும் வெற்றியும் உண்டு பகைவரின் வெற்றியின் பின்னால்
சில கயவர் நிச்சயம் இருப்பார் தோல்வியில் அனைவரும் அழுதால் அந்த கயவர் வெல்வார்கள்
இரை தேடி தோற்ற புலி பசியாலே படுத்து செத்தது உண்டா? தோல்விக்கு பயந்தால் அது அடிமைக்கு வித்திடும்
வெற்றிக்காய் நீ உழைத்தால் அது உன்னை அரியாசனத்தில் இட்டு மகுங்கள் சூட்டிடும்
நுட்பமாய் சிந்தித்து வீரமாய் நீ எழு இரும்பே வளையும் இடியே முனகும்
ஓடும் நீருக்கு தடை இட்டால் அது கூடி உரையே அழித்திடும் ஓடி உழைக்கும் உன்னை தடுத்தால் பகைவரின் தலைகள் தப்பாமல் உருளும்
தோல்வியை தந்தவனை தோல்விக்குள் தள்ளி வெற்றியை அரவணைக்க தைரியமாய் நீ எழு
விழ்ச்சி நிலையில்லை அதன் தொடர்ச்சியே வெற்றி தமிழா நாளையே பெரு வெற்றி உன்னை வந்து சேரும் அது வரை காத்திரு
அம்மா கவனம்
அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம்.
உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது!
அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.!
அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொலையும் தான். பதுங்கு குழிக்கு பக்கத்தில் இருந்து கொள் ! வானம் வெறுமையென்று வெளியில் வராதே!! நிமிர்ந்தும் நடக்காதே.கண்ட உடன் சுடுவார் கயவர்
குழந்தைகளை நேசித்த நேத்தாயின் நாட்டார். வைறுகாய விடாதே அவர்கள் பட்டிணியால் துடிப்பார். தெரியும் ஒன்றும் இல்லை என்று கஞ்சி தன்னும் குடி என்னை பற்றி கவலை வேண்டாம்.
மண்தின்று வழரும் மரமாக மாறிவிட்டடோம் இல்லை மாற்றி விட்டார். நஞ்சற்ற கொடி எல்லாம் உணவு கசப்பான உணவு கூட அமுது மலம் கலக்கா நீரெல்லாம் குடிநீர் மொத்தத்தில் காட்டு மரம் கூட கண்டு அஞ்சும் காட்டு வாசிகளாக்கிவிட்டார்.
அம்மா என் அழுக்கு சட்டை கண்டு கலங்கும் உன் கண்ணீர் துன்பத்திலும் வற்றாத உன் பாசம். சட்டையில் தான் அழுக்கு இன்னும் என்னில் என் மனத்தில் இல்லை.
கயவர்கள் காலடி பட்ட நிலத்திற்கு நீ போகவிரும்பவில்லை அதில் எனக்கும் விருப்பம் இல்லை. இல்லை என்னும் ஒன்றுக்குள் நாம் வாழ்ந்து கொண்டுள்ளோம் எதுவும் இங்கில்லை பணம் இல்லை பொருள் இல்லை! மருந்தில்லை உணவில்லை நின்மதி துளிக்கும் இல்லை! தூங்கவும் விடவில்லை ஒன்று மட்டும் உள்ளது. சுற்றவும் சாவும் அழுகையும் அவலமும்! இது தொடராது தொடர விடவும் மாட்டார் நாம் இதுவரை நம்பியவர். உலகத்து உறவுகள் எப்போதும் கைவிடார் அதுவரை உயிரைப்பிடிப்போம் இல்லை எம் இறப்பில் எழுதப்படட்டும் பிந்திய ஈழத்தின் அத்தியாயம்...
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது.
தனுஷ்கோடிக்கும் மன்னாருக்கும் இடையே - மரத்தினால் கூட பாலம் கட்ட எங்களிடம் பணம் இல்லை . சிங்களனின் அசுரவேட்டைக்கு பலியாகிப் போன எம்மக்களின் எலும்புகளால் பாலம் கட்டித்தருகிறோம் மீதமிருக்கும் எம் மக்கனளயாவது காப்பாற்ற வந்துவிடு தமிழனே ...
சிங்களனின் சித்ரவதையால் அழுகின்ற எம்குரல் - திரைப்பட பாடல் கேட்டு பழுத்துப் போன உன் செவியில் விழவில்லையா ?
சேரன் செங்குட்டுவனும் கரிகால சோழனும் வீரபாண்டிய கட்டபொம்மனும் வீர நடை போட்ட தமிழ்நாட்டில் இப்போது ஒரு வேந்தனும் பிறக்கவில்லையா ?
நாங்கள் ஒன்றும் அந்நியர்கள் இல்லை உமது இரத்த சொந்தங்கள் தானே
" தமிழன் " என்பதை விட வேறு முகவரி எமக்கில்லை
இரத்த ஆற்றில் மிதக்கின்ற - தமிழீழத்தை கரை சேர்க்க - இரத்தத்தில் தன்மானமுள்ள தமிழன் ஒருவரும் பிறக்கவில்லையா ?
புத்தனின் போதனைகளை குழித்தோண்டி புதைத்துவிட்டு - அதில் கண்ணிவெடியை நட்டு வைக்கின்றான் - அதில் சிக்கி கால்களை இழந்து கிடக்கின்றோம்
உயிருக்குத்தான் உத்ரவாதமில்லையென்றாலும் - இங்கே கற்புக்கும் உத்தரவாதமில்லை .
சுதந்திர காற்றுக்காக ஏங்கி ஏங்கி துருபிடித்துப் போன இதயத்திடம் துப்பாக்கி குண்டுகளையனுப்பி நலம் விசாரிக்கிறான் - "சிங்களன்" எனும் கொடூர சிறுத்தையான்...
முப்பது வருட போராட்டத்திற்கு பரிசாக - மூன்று லட்சத்திற்கு மேலான எம் பிணங்கள் தான் கிடைத்தது இது ஒரு விசித்திர பரிசு அல்லவா ?
கிடைத்த பரிசை - பங்காளி உனக்கு பங்கிட்டு தருகிறேன் உமது - மருத்துவ படிப்புக்கு பயன்படுமல்லவா ..
பெரியார் ; அண்ணா; காமராஜர் ; நடந்து சென்ற பாதையை தீ போட்டு எரித்துவிட்டு அதில் - நீ குளிர் காய்கின்றாயோ ?
அவர்கள் சுவாசித்து விட்டு சென்ற காற்றை உங்களில் ஒருவர் கூட சுவாசிக்கவில்லையா ?
இருபத்தொறாம் நூற்றாண்டின் அடிமைகள் நாங்கள் எங்களுக்காக - குரல் கொடுக்க இந்த நூற்றாண்டில் மார்ட்டின் லூதர் கிங்கும் இல்லை காந்தியடிகளும் இல்லை
உலகத்தால் கைவிடப்பட்ட எங்கள் மேல் இரக்கம் காட்ட இறைவனுக்கும் கூட இதயமில்லை
தமிழனே ! - எங்களுக்காக சண்டைப்போடவோ ; சமாதானம் பேசவோ நீ வராவிட்டாலும் புதைக்க ஆளின்றி நடு வழியில் கிடக்கும் எம் மக்களின் பிணங்களை புதைப்பதற்காகவாவது வருவாயா ?
ஒவ்வொரு இரவும் நீ வந்து தாலாட்டினாலும் ஒரு நொடியில் - என் மனதை உடைத்தவள் - நீ உனக்காக உருகியது என்னிதயம்...
இதயங்கள் ஒன்றாக சேர்ந்த பின் அன்பின் பரிமாணங்கள் பல வடிவில் தந்தாய்...
நிரந்தரமாக நீ வேண்டும் எனக்கு... என் மனதை பிடித்தாட் போல் உடலையும் பிடித்தாய்... மறவாமல் - உன் அன்பினை வாரி வழங்குகிறாய் என்னால் முடியவில்லை... நம் உறவுக்கு உயிரூட்ட முடியவில்லை...
உன் உறவு வேண்டும் என் உயிருள்ளவரை... என்றும் காத்திருபேன் உனக்காக...
MY DEAR HOW ARE YOU? I AM HAPPY MY HI5 FRIEND. NICE AND SIMPLE PROFILE. I LIVING IN CANADA I LOVE MY FRIENDS AND FRIENDSHIP. SEE MY PIC AND PROFILE. U COME NOW ONLINE MESSENGER MY Email ID IS dj-mayuran@live.com & dj_mayuran@yahoo.com SWEET LIKE ME LOVE FROM LOVE TAKE CARE BYE
சந்தனப் பேழைகளே! - இங்கு
கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா?
குழியினுள் வாழ்பவரே!
உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்
உறவினர் வந்துள்ளோம் - அன்று
செங்களம் மீதிலே உங்களோடாடிய
தோழர்கள் வந்துள்ளோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே
நாமும் வணங்குகின்றோம் - உங்கள்
கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு
சத்தியம் செய்கின்றோம்
சாவரும் போதிலும் தணலிடை வேகிலும்
சந்ததி தூங்காது – எங்கள்
தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின்
தாகங்கள் தீராது.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.
உயிர்விடும் வேளையில் உங்களின் வாயது
உரைத்தது தமிழீழம் - அதை
நிரை நிரையாகவே நின்றினி விரைவினில்
நிச்சயம் எடுத்தாள்வோம்
தலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும்
தனியர(சு) என்றிடுவோம் - எந்த
நிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின்
நினைவுடன் வென்றிடுவோம்.
எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை
இங்கே திறவுங்கள்.
ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே
மறுபடி உறங்குங்கள்.