ஜனாதிபதி மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் மட்டும் 25000 படைவீரர் தப்பியோட்டம்:-முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டும் வருகின்றனர்.
மகிந்த யுத்தத்தை ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை தப்பியோடியுள்ள ராணுவத்தினரின் எண்ணிக்கை 25000 இலும் அதிகம் என்று சிங்கள வார இதழான ராவய தெரிவித்திருக்கிறது.
இந்த தை மாதம் வரையிலும் தப்பியோடியவர்களின் எண்ணிக்கை 15000 என்று படை வட்டாரங்களை ஆதாரங்காட்டி இச்செய்தி வெளிடப்பட்டிருக்கிறது.
போர் நடக்கும் பிரதேசங்களில் இருந்து தலைமறைவாகும் தமது சகாக்களைக் கண்டுபிடிக்க அங்கிருந்து வெளியேறும் பேரூந்துகள், மற்றும் இதர போக்குவரத்து வாகனங்கள் என்று ராணுவத்தின் காவல்ப்பிரிவு கடுமையான சோதனைகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முகச்சாயலிலும், உடல்கட்டமைப்பிலும் ராணுவ வீரனைப் போல இருக்கும் ஆண்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆவணி, புரட்டாதி மாதங்களில் மட்டுமே தப்பியோடிய ராணுவத்தினரின் எண்ணிக்கை சுமார் 700 என்று தெரிவிக்கும் இந்த அறிக்கை, அதிகாரிகள் தமக்குக் கீழ் சேவையாற்றும் ராணுவ வீர்ர்களின் நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளை கூர்ந்து அவதானித்து வருவதாகவும் குறிப்பிடுகிறது
More Graphics @ CPGrafix.net